ராசிபுரம் வநேத்ரா முத்தாயம்மாள் கலை அறிவியல் கல்லூரி மாற்றுத் திறனாளிகள் மன்றம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுகக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாற்றுத் திறனாளிகள் வாழ்வு மேம்படவும், சுயதொழில் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கவும் முத்தாயம்மாள் கலைக் கல்லூரி, கோவை செ
ஷெய்யர் ஹோம்ஸ், சேலம் ரவுண்ட் டேபிள், சேலம் லேடீஸ் சர்க்கிள் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தின. கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ஆர்.செல்வகுமரன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயல் இயக்குநர் மஞ்சுமுத்துவேல், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜி.ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் சார்-ஆட்சியர் கிரந்திகுமார் பதி நல உதவிகளை வழங்கினார். இதில் 86 பயனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லூரியின் சமூக செயல்பாட்டுத் தலைவர் எம்.ராமமூர்த்தி, மாற்றுத் திறனாளிகள் மன்ற ஒருங்கிணைப்பாளர் எம்.ரவி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.