சிறு, குறு தொழில் நிறுவனங்கள் தரச் சான்றிதழ் மானியம் பெற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;
சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின், சர்வதேச போட்டித் தன்மையினை மேம்படுத்தவும், உலகளாவிய சந்தையுடன் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கு ஏதுவாக, ISB 9001 / ISB 14001 / HACCP / BIS / ZED என்ற நிறுவனங்கள் சர்வதேச தரச்சான்றிதழ்களை வழங்குகிறது. இந்த சான்றிதழ் பெறுவதற்காக செலுத்தும் கட்டணத்தில், ஒவ்வொரு சான்றிதழுக்கும் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை செலுத்துவதை ஈடு செய்யும் வகையில், திட்டத்தினைச் செயல்படுத்த, கடந்த மே 15-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இத் திட்டத்தின் கீழ் NABCB-apy இல் பதிவு செய்தால் ரூ.ஒரு இலட்சம் வரை மானியம் கிடைக்கும். மேலும், பரிசோதனைக் கூடத்திற்கு வாங்கக்கூடிய இயந்திரங்கள் மற்றும் தளவாடங்களில் முதலீடு செய்யப்படும் தொகையில் 50 சதவீதம், அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை மானியமாக கிடைக்கும். இம் மானியத்தைப் பெற தகுதியான குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் சான்றிதழ் பெற்ற நாளிலிருந்து ஓராண்டுக்குள், நாமக்கல் மாவட்ட தொழில் மைய பொது மேலாளருக்கு, உரிய படிவத்தில் ஆவணங்களுடன் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். இந்த சான்றிதழ் வழங்கும் நிறுவனங்கள் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக நிறுவனங்களை நடத்தி வரும்பட்சத்தில், ஒவ்வொரு இடத்திற்கும் தனித்தனியாக மானியம் பெற விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பொது மேலாளரைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.