நாமக்கல்

உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்பு

15th Jul 2019 09:53 AM

ADVERTISEMENT

ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய பூசாரிபாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் உலக மக்கள் தொகை தினத்தை தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.  இதில் பள்ளித் தலைமையாசிரியர் கே.உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.  இதில் பள்ளி மாணவ, மாணவியருக்கு மக்கள்  தொகையின் பெருக்கத்தினால் ஏற்படும் பாதகங்கள் குறித்து விளக்கிக் கூறப்பட்டது.  
மேலும்,  மக்கள் தொகை கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை மாணவ, மாணவியர் ஏற்றுக்கொண்டனர்.  சுகாதாரம்,  குழந்தைத் திருமணம் தடுத்தல்,  குடும்ப நலத் திட்டம் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது.  இதில் பள்ளி ஆசிரியர்கள் பி.நடராஜன், பி.தனசேகரன், சி.சித்ரா,  மா.அனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT