நாமக்கல்

பரமத்தி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

6th Jul 2019 07:46 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூர் வட்டம், பரமத்தி அருகே வில்லிபாளையத்தில்  மின்சாரம் பாய்ந்து கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.
பரமத்தி அருகே உள்ள பில்லூரைச் சேர்ந்த கணேசன் மகன் முத்துகிருஷ்ணன் (26). கட்டடத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இவர் வியாழக்கிழமை வில்லிபாளையத்தைச் சேர்ந்த செல்வமூர்த்தி என்பவர் புதிதாக கட்டி வரும் வீட்டில் வேலை பார்த்து வந்தார்.  கட்டட வேலையை முடித்துவிட்டு மின் மோட்டாரை இயக்க முயன்றுள்ளார். 
அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்ததில் அவர் மயங்கி விழுந்துள்ளார். இதைப் பார்த்த சக தொழிலாளர்கள் முத்துகிருஷ்ணனை மீட்டு, பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அவசர ஊர்தி மூலம் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். 
இறந்துபோன முத்துகிருஷ்ணனுக்கு 4 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி, தமிழரசி (22) என்ற மனைவி உள்ளார்.  இந்தச் சம்பவம் குறித்தி பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT