நாமக்கல்

பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் உண்ணாவிரதம்

4th Jul 2019 09:38 AM

ADVERTISEMENT

நாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.எஸ்.என்.எல். எம்ப்ளாய்ஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்கம் சார்பில், நாமக்கல் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் செவ்வாய்கிழமை முதல், அங்கு பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதன்கிழமை இரண்டாவது நாளாகப் போராட்டம் நீடித்தது. இரு சங்கங்களின் நிர்வாகிகள் எம்.விஜயன், கே.ராஜன், ஜி.பாஸ்கர், எஸ்.ராமசாமி, பி.செல்வம், பி.தங்கராஜூ உள்ளிட்டோர் போராட்டம் குறித்து விளக்கிப் பேசினர்.
இந்த உண்ணாவிரதத்தில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியர்களாகப் பணியாற்றி வருபவர்களுக்கு, கடந்த 6 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். உழைப்பை வாங்கிக் கொண்டு ஊழியர்களை பட்டினி போடும் நிலையை ஏற்படுத்த வேண்டாம்.  நிதியில்லை என்பதை காரணம் காட்டி ஊழியர்களை வேதனைக்குள்ளாக்க வேண்டாம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில், 50-க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்றனர்.
திருச்செங்கோட்டில்...
திருச்செங்கோடு பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிலுவைத் தொகையை வழங்கக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT