நாமக்கல்

நாமக்கல்லில் ஜூலை 13-இல் மக்கள் நீதிமன்றம்

4th Jul 2019 09:44 AM

ADVERTISEMENT

தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு அறிவுரைப்படி, நாமக்கல்லில் வரும் 13-ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடைபெறவுள்ளது. 
இதுதொடர்பாக, நாமக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;
தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிவுரைப்படி, தமிழகத்தில் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளை மற்றும் மாவட்டங்களில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழு மூலம் வரும் 13-ஆம் தேதி சனிக்கிழமையன்று மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. வழக்குகளை சமாதானமாகவும், விரைவாகவும் முடித்துக் கொள்ளவும் இந்நீதிமன்றம் வழிவகை செய்கிறது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் சாலை விபத்து வழக்குகளில் இழப்பீடு, சம்பந்தப்பட்ட நிலுவையிலுள்ள மேல்முறையீட்டு வழக்குகள், மின்சாரப் பயன்பாடு, வீட்டு வரி, தண்ணீர் வரி, ஓய்வூதியம் சம்பந்தமான ரிட் மனுக்கள், காசோலை மோசடி, மண விலக்கு தவிர்த்த குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்சம், நில ஆர்ஜித வழக்குகள், தொழிலாளர் நலன் இழப்பீடு வழக்குகள் மற்றும் இதர பொதுப் பயன்பாடு வழக்குகள் போன்றவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். அதற்கென உள்ள நீதிபதிகள் வழக்குகளை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பர்.
இழப்பீட்டுத் தொகை மற்றும் பிற பிரச்னைகளில் இருதரப்பினர் சம்மதத்துடன் விரைவில் தீர்க்கவும் வழிவகை செய்கிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சட்டப் பணிகள் ஆணைக் குழுவில், மனுதாரர்கள் தங்களது வழக்குரைஞர்களை பயன்படுத்துவது குறித்த விருப்பத்தை தெரிவிக்கலாம். மக்கள் நீதிமன்றங்கள் மூலம் வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT