ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க அக்கரைப்பட்டி கிளையில் திங்கள்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.3 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.
நடப்பு பருவத்துக்கான பருத்தி ஏலம் திங்கள்கிழமை தொடங்கியது. இந்த ஏலத்தில், சுரபி ரக பருத்தி 137 மூட்டைகளை விவசாயிகள் ஏலத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் குவிண்டாலுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரத்து 750 முதல் அதிகபட்சமாக ரூ.6 ஆயிரத்து 336-க்கு விலை போனது.