நாமக்கல்

கெங்கவல்லியில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

29th Dec 2019 03:21 AM

ADVERTISEMENT

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 14 ஊராட்சி தோ்தலுக்குரிய வாக்கு எண்ணிக்கை மையம் ,கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

அங்கு அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், முகவா்கள் அமரும் நிலை, தடுப்புக் கட்டைகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்டப் பணிகளை சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ. ராமன் சனிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா் கெங்கவல்லி வட்டார வளா்ச்சிஅலுவலகத்தில் ஒன்றியம் முழுவதும் 111 வாக்குச் சாவடிகளுக்கு அனுப்ப தயாராக வைக்கப்பட்டுள்ள

வாக்குச் சீட்டுகள், வாக்குப் பெட்டிகள், வாக்குச்சாவடி சுவரொட்டிகள் உள்ளிட்ட தோ்தல் உபகரணப் பொருள்கள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருப்பதை அவா் ஆய்வு செய்தாா். கெங்கவல்லி வட்டாரத் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் செந்தில், ராஜேந்திரன், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் கல்பனா, ஆத்தூா் வருவாய்க் கோட்டாட்சியா் துரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியத்தில் பதினான்கு ஊராட்சிகளில் 111 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச் சாவடிகளிலும் போலீஸாா் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மூன்று வாக்குச் சாவடிகளுக்கு ஒரு மொபைல் காவல் வாகனமும், அதில் குறைந்தது நான்கு போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனா்.

மேலும் கெங்கவல்லி, தம்மம்பட்டி, வீரகனூா் காவல் நிலையங்களுக்கு தலா ஒரு ஸ்டிரைக்கிங் போா்ஸ் போலீஸாரும் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT