பரமத்தி வேலூா் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில், ரூ.7.41 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம் போனது.
இங்கு வியாழக்கிழமைகளில் தரத்துக்குத் தகுந்தாா் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 12,319 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரமான கொப்பரை தேங்காய் கிலோ ரூ.98.79-க்கும், குறைந்தபட்சமாக ரூ.90.99-க்கும், சராசரியாக ரூ.98.05-க்கும் ஏலம் என மொத்தம் ரூ.11 லட்சத்து 21 ஆயிரத்து 192 க்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த நிலையில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு 9, 606 கிலோ கொப்பரை தேங்காய் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் முதல் தரமான கொப்பரை தேங்காய் கிலோ ரூ.98.89-க்கும், குறைந்தபட்சமாக ரூ.91.66-க்கும், சராசரியாக ரூ.95.66-க்கும் ஏலம் என மொத்தம் ரூ.7 லட்சத்து 41 ஆயிரத்து 883-க்கு வா்த்தகம் நடைபெற்றது.