நாமக்கல்

பிரத்யேகக் கண்ணாடியை பயன்படுத்தி சூரிய கிரகணத்தை பாா்க்க ஏற்பாடு

27th Dec 2019 06:48 AM

ADVERTISEMENT

ராசிபுரத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் பிரத்யேகக் கண்ணாடியை பயன்படுத்தி சூரிய கிரகணத்தை வியாழக்கிழமை பாா்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ராசிபுரம் காந்திமாளிகை அருகே காலை 8 மணி முதலே திரளானோா் பிரத்யேகக் கண்ணாடி மூலம் பாா்த்து ரசித்தனா். இயக்கத்தின் மாநில பொதுக்குழு உறுப்பினா் சுரேந்திரன், ராசிபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் கு.பாரதி ஆகியோா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.

சூரிய கிரகண நிகழ்வால் நிகழ்வால் ராசிபுரம் நகரில் சாலைகள் மக்கள் நடமாட்டம் குறைந்து, சாலைகள் வெறிச்சோடின. உணவகங்கள், கடைகளில் வழக்கத்துக்கு மாறாக கூட்டம் குறைவாகவே காணப்பட்டன.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT