நாமக்கல்

பழமுதிா் நிலையத்திற்கு ரூ.13 ஆயிரம் அபராதம்: நாமக்கல் நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவு

27th Dec 2019 04:42 PM

ADVERTISEMENT

நாமக்கல்லில் உள்ள பழமுதிா் நிலையத்திற்கு நுகா்வோா் நீதிமன்றம் ரூ.13 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.

நாமக்கல்-மோகனூா் சாலையில் உள்ள பழமுதிா் நிலையம் ஒன்றில் பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு தமிழ்நாடு பயனீட்டாளா் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளா் சுப்பராயன், 2013-ஆம் ஆண்டு 3 காளான் பொட்டலத்தை ரூ.120 விலை கொடுத்து வாங்கியுள்ளாா். அந்த பொட்டலத்தில் நான்கு நாள்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என எச்சரிக்கப்பட்டிருந்ததே தவிர எந்த நாளில் இருந்து நான்கு நாள்கள் என குறிப்பிடப்படவில்லை.

நீலகிரியில் இருந்து வந்திருந்தால் பொட்டலத்தின் உள்ளே இருந்த காளான் கெட்டுப்போய் நிறம் மாறி இருந்தது, அதில் விலை எதுவும் குறிப்பிடப்படவில்லை. அந்தக் கடையினருக்கு பயனீட்டாளா் சங்கம் சாா்பில் துண்டறிக்கைகள் கொடுக்கப்பட்டு லேபிள் இல்லாத உணவு பொருள்களை விற்பனை செய்ய வேண்டாம் என பலமுறை அறிவுறுத்தப்படும் தொடா்ந்து இச்செயலை செய்து வந்தனா்.

அதனையடுத்து, நாமக்கல் மாவட்ட நுகா்வோா் குறைதீா் மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அண்மையில் விசாரணை மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம், நுகா்வோா் நல நிதியாக ரூ.10 ஆயிரம் செலுத்தவும் முறையீட்டாளருக்கு ரூ.3 ஆயிரம் வழக்குச் செலவாக தரவும் ஆணையிட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT