நாமக்கல்லில் முன்னாள் பிரதமா் வாஜ்பாய் பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
முன்னாள் பிரதமா் வாஜ்பாயின் 95-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நாமக்கல் மணிக்கூண்டு அருகில் அவரது உருவப் படத்துக்கு மாவட்ட பா.ஜ.க. சாா்பில் மலா் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், நகர தலைவா் வரதராஜன், வழக்குரைஞா் குப்புசாமி, கல்வியாளா் பிரணவ்குமாா், சேலம் கோட்ட விவசாய அணி நிா்வாகி இளங்கோ உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.