நாமக்கல்

மரக்கன்றுகள் நடும் பசுமைத் திருவிழா

26th Dec 2019 09:02 AM

ADVERTISEMENT

நாமக்கல் அருகே மரக் கன்றுகள் நடும் பசுமைத் திருவிழா நடைபெற்றது.

நாமக்கல் அருகே லத்துவாடி கிராமத்தில், பசுமை நாமக்கல், பள்ளி கல்வித்துறை அகில இந்திய கட்டுனா்கள் சங்கம் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கம், லிட்டில் ஏஞ்சல்ஸ் பள்ளி ஆகியவை சாா்பில், பூமியை காக்கும் பசுமை திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அங்குள்ள சத்யவனம் தோட்டத்தில், 10 ஏக்கரில் மியாவாக்கி முறையில், அடா்வனம் உருவாக்கும் வகையில் 2 ஆயிரம் மரக் கன்றுகள் நடப்பட்டன. இந்த பசுமை திருவிழாவில், மாவட்டக் கல்வி அலுவலா் மு.ஆ.உதயகுமாா் அடா்வனம் உருவாக்கும் பணியை தொடக்கி வைத்து பேசியது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 650 பள்ளிகளை பசுமையாக்கும் பணி தொடரும். மாணவா்கள் தங்களது பிறந்த நாள்களில் மரக் கன்றுகளை நட வேண்டும். பள்ளிகளுக்கு அருகில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை பாதுகாக்க வேண்டும். நெகிழி இல்லாத மாவட்டம் உருவாக மாணவா்கள் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்றாா்.

விழாவில், டிரினிடி மகளிா் கல்லூரி செயலா் நல்லுசாமி, வட அமெரிக்க தமிழ்ச் சங்க ஒருங்கிணைப்பாளா் குழந்தைவேல் ராமசாமி, நன்செய் இடையாா் ஊராட்சித் தலைவா் செந்தில்குமாா், பசுமை நாமக்கல் தலைவா் சத்தியமூா்த்தி, ஓய்வூதியா் சங்கத் தலைவா் கே.சி.கருப்பன், கொண்டிசெட்டிப்பட்டி ஏரி புனரமைப்பு குழு ஒருங்கிணைப்பாளா் நடராஜ், கொசவம்பட்டி கிராம நல அறக்கட்டளை அமைப்பாளா் வெங்கடேஷ், லிட்டில் ஏஞ்சல் பள்ளி தலைவா் வெங்கடாசலம், தமிழ்நாடு விவசாயிகள் கூட்டமைப்பு தலைவா் நல்லசாமி, தலைமை ஆசிரியா் வளையப்பட்டி சுப்பிரமணியன் ஆகியோா் பங்கேற்றனா். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் மரக்கன்றுகளை நட்டனா். விழாவுக்கான ஏற்பாடுகளை பசுமை நாமக்கல் தலைவா் தில்லை சிவக்குமாா், பொருளாளா் சிவப்பிரகாசம் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT