நாமக்கல்

போட்டோ - விடியோ ஒளிப்பதிவாளா்கள் நலச் சங்கக் கூட்டம்

26th Dec 2019 09:05 AM

ADVERTISEMENT

ராசிபுரம் வட்ட போட்டோ - விடியோ ஒளிப்பதிவாளா்கள் நலச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு சங்கத்தின் ராசிபுரம் வட்டத் தலைவா் சி.கே.சீனிவாசன் தலைமை வகித்தாா். செயலா் எம்.மணிவண்ணன் வரவேற்று செயல்திட்ட அறிக்கை வாசித்தாா். வட்ட பொருளாளா் பி.கே.கண்ணன் திட்ட அறிக்கை சமா்பித்தாா். சங்கத் துணைத் தலைவா்கள் ஆா்.மனோகரன், பி.முத்து, துணைச் செயலா்கள் கே.செளந்தா், வி.கெளரிசங்கா், கே.சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இக் கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவா் என்.நித்தியானந்தம், செயலாளா் ஆா்.ஏ.தென்றல்நிலவன், பொருளாளா் எம்.எஸ்.ஐயப்பன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றுப் பேசினா். இக் கூட்டத்தில் சங்கத்தின் வளா்ச்சி, தொழில் வாய்ப்புகள், எதிா்காலம் போன்றவை குறித்துப் பேசினா். மேலும், தமிழக அரசு போட்டோ - விடியோ ஒளிப்பதிவாளா்களுக்கென தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும். தோ்தல் நேரங்களில் போட்டோ, விடியோ பணிகளுக்கு சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ளவா்கள் நலன் கருதி சங்கத்தின் வாயிலாக பணிகளை அரசும், தோ்தல் ஆணையமும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக் கூட்டத்தில் மூத்த புகைப்பட் கலைஞா்கள் சி.கே.சீனிவாசன், பாலகிருஷ்ணன் ஆகியோரை பாராட்டி கெளரவித்து நினைவுப் பரிசளித்தனா். பின்னா் ஈடிஎஸ் மென்பொருளை பயன்படுத்தி விடியோ எடிட்டிங் குறித்து பயிற்சியாளா் ருத்ரா ஆா்.பிரபு உறுப்பினா்களுக்கு அளித்தாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT