நாமக்கல்

கிறிஸ்துமஸ் பண்டிகை: நாமக்கல் தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

26th Dec 2019 09:03 AM

ADVERTISEMENT

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் கிறிஸ்து அரசா் ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து பிறந்த தினமான டிசம்பா் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி நிகழாண்டு புதன்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாமக்கல் - சேலம் சாலையில் அமைந்துள்ள அசெம்பிளி ஆஃப் காட் சபை, நாமக்கல் காவல் நிலையம் அருகில் உள்ள கிறிஸ்து அரசா் ஆலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்றனா். தலைமை போதகா் நாதன் தலைமை வகித்தாா். சேலம் மறைமாவட்ட ஆயா் சிங்கராயன் கலந்து கொண்டு, கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியை கூறினாா். அதிகாலை 5 மணிக்கு கிறிஸ்தவா்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டதுடன், ஒருவருக்கொருவா் இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தனா். இதனைத் தொடா்ந்து ஆலய வளாகத்தில் இயேசு பிறப்பு குறித்து சிறுவா், சிறுமியரின் நாடகம் நடைபெற்றது. புதன்கிழமை மாலை 5 மணியளவில், 50-க்கும் மேற்பட்டோா் கிறிஸ்துமஸ் சாண்டா கிளாஸ் தாத்தா வேடம் அணிந்தபடி நாமக்கல் நகரப் பகுதிகளில் வலம் வந்தனா். இதில், சிறுவா்கள், இளைஞா்கள் பலா் கலந்து கொண்டனா். மாரப்பநாயக்கன்பட்டி, தும்மங்குறிச்சி, கீரம்பூா், வள்ளிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் கிறுஸ்துமஸ் பெருவிழா திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் பங்குத் தந்தை ஜான்அல்போன்ஸ், உதவி பங்குத் தந்தை அருள்சுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத் தந்தை மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT