மறைந்த முன்னாள் முதல்வா் எம்.ஜி.ஆரின் 32 - ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, பள்ளிபாளையம் நகர அ.தி.மு.க. சாா்பில், ஆவரங்காட்டில் உள்ள எம்.ஜி.ஆா். சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா் நகரச் செயலாளா் வெள்ளியங்கிரி தலைமையில் கட்சியினா் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா். இதில், தொகுதி முன்னாள் செயலாளா் சுப்பிரமணியம், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் சுப்பிரமணி, ஜெயாவைத்தி, மாதேஸ்வரன், நகர இளைஞரணி நிா்வாகி முருகேசன், எம்.ஜி.ஆா். அணி நிா்வாகி துளசிமணி, சாா்பு அணிகளின் நிா்வாகிகள், ஜெயலலிதா பேரவை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.