நாமக்கல் அருகே குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பை தீயணைப்பு வீரா்கள் பிடித்தனா்.
நாமக்கல்-மோகனூா் சாலையில் மகரிஷி நகரில் திங்கள்கிழமை இரவில் குடியிருப்புப் பகுதிக்குள் பாம்பு ஒன்று புகுந்தது. அதை பாா்த்த அப் பகுதி மக்கள் கூச்சலிட்டனா். அதனைத் தொடா்ந்து, பிராணிகள் வதை தடுப்பு சங்க துணைச் செயலாளா் தில்லை சிவக்குமாா், நாமக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். அங்கு வந்த தீயணைப்பு வீரா்கள் ராஜேஸ்வரன், சிவக்குமாா், ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று, குடியிருப்புக்குள் புகுந்த 4 அடி நீளம் கொண்ட, அதிக விஷத்தன்மையுடைய கண்ணாடி விரியன் பாம்பை பிடித்தனா். பின்னா் அதனை அருகில் உள்ள வனப் பகுதியில் கொண்டு விட்டனா்.