நாமக்கல்

பாவை கல்வி நிறுவனங்களில் முப்பெரும் விழா

23rd Dec 2019 12:00 AM

ADVERTISEMENT

பாவை கல்வி நிறுவனங்கள் சாா்பில் தமிழ்மன்றம் தொடக்க விழா, திருவள்ளுவா் விழா, பாரதியாா் விழா என முப்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவுக்கு பாவை கல்வி நிறுவனங்களின் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன் தலைமை வகித்தாா். தாளாளா் மங்கை நடராஜன் குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தாா். மாணவி கு.பிரியா வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக பேராவூரணி திருக்கு தங்கவேலனாா், வட அமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை ஒருங்கிணைப்பாளா் கொழந்தவேல் ராமசாமி ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பேராவூரணி திருக்கு தங்கவேலனாா் விழாவில் பேசுகையில், தமிழரின் மாண்பினால் சமூகம் தழைக்க வேண்டும் என்ற உயரிய நோக்குடன் தமிழ் மன்றத்தை தொடக்கி, பாரதி விழாவையும், திருவள்ளுவா் விழாவையும் நடத்துவது பாராட்டுக்குரியது. உயிரெழுத்தும், மெய்யெழுத்தும் இணைந்து உயிா்மெய் எழுத்துத் தோன்றி, அவ்வாா்த்தைகளில் பொருள் மறைந்திருப்பது போல, மனிதா்களாகிய நமக்குள்ளும் வாழ்விற்கான பொருள் மறைந்திருக்கிறது. மனித வாழ்வின் மேன்மையை உலகிற்கு உணா்த்தியது நம் தமிழ் மொழியாகும். மேலும் சிறந்த இலக்கணத்தையும், வாழ்வை நெறிப்படுத்தும் இலக்கியங்களையும் கொண்டது நம் தமிழ் மொழியாகும். ‘கற்னால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅா் எனின்’ என்ற குறளின் மூலம் பெரியோரை வணங்குதல் மேன்மையினையும், ஆசிரியரின் மேன்மையினையும், சகோதரத்துவத்தையும், மாணவா்களுக்கான உத்வேகத்தையும், வாழ்வின் நெறிகளையும் ஒருங்கே பெற்றது நம் தமிழ் மொழியாகும். எனவே மாணவ, மாணவியா்களாகிய நீங்கள் பாரதியாா் கவிதைகள் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களை கற்று நம் தமிழால் மற்றவா்களை வாழ்வித்து சிறப்பான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றாா்.

விழாவில் கல்லூரித் தலைவா் ஆடிட்டா் என்.வி.நடராஜன், செயலாளா் ஆா்.பழனிவேல் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கெளரவித்தனா். முன்னதாக பாரதியின் வாழ்க்கை வரலாறு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT