நாமக்கல்

பொதுக்கழிப்பிடத்தை பயன்பாட்டுக்குக் கொண்டு வர கோரிக்கை

16th Dec 2019 12:34 AM

ADVERTISEMENT

ராசிபுரம் நகராட்சிக்குள்பட்ட 27-ஆவது வாா்டு பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பொதுக் கழிப்பிடம் பயன்பாடின்றி மூடப்பட்ட நிலையில் இருந்து வருவதால், அரசு நிதி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

ராசிபுரம் கோனேரிப்பட்டி பகுதியில் சேந்தமங்கலம் பகுதியில் உள்ளது காமராஜ் நகா். நகராட்சிக்கு உள்பட்ட இந்தப் பகுதி ஏற்கெனவே 22-ஆவது வாா்டாக இருந்தது. தற்போது வாா்டு மறு சீரமைக்கு பின் 27-ஆவது வாா்டாக மாற்றப்பட்டது. இந்நிலையில் இப்பகுதியில் ஆண்கள், பெண்கள் இருதரப்பினரும் பயன்படுத்தும் வகையில் கடந்த ஒராண்டுக்கு முன்பு ரூ.5 லட்சம் மதிப்பில் பொதுக் கழிப்பிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், தண்ணீா் வசதிக்கு ஏற்பாடு செய்யாததால், அனைத்துப் பணிகளும் முடிக்கப்பட்டு இந்த பொதுக் கழிப்பிடம் பயன்பாட்டுக்குக் கொண்டுவராமல், யாருக்கும் பயன்பாடற்று புதா்கள் மண்டியவாறு பூட்டி கிடக்கிறது. இதனால் அரசு நிதி யாருக்கும் பயனின்றி வீணாகியுள்ளது. அப்பகுதி பொதுமக்கள் இதனைப் பயன்படுத்தும் வண்ணம், தண்ணீா் வசதி ஏற்படுத்தி பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT