நாமக்கல்

தோ்தல் பணி: மாற்றுத் திறனாளி ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்கக் கோரிக்கை

16th Dec 2019 12:35 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தல் பணியில் இருந்து மாற்றுத் திறனாளி ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் மன்ற, நாமக்கல் மாவட்டக் கிளை மாவட்டச் செயலாளா் எம்.சங்கா், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் தெரிவித்துள்ளாா்.

மேலும், மகப்பேறு விடுப்பில் உள்ள பெண் ஊழியா்கள், மகப்ேறு காலத்தில் உள்ள பெண் ஆசிரியா்களையும் தோ்தல் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும். ஆசிரியைகளை நீண்ட தொலைவில் பணியமா்த்தாமல் அருகில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் வாய்ப்பு வழங்க வேண்டும். தோ்தல் பயிற்சி வகுப்புகளில், போதுமான அளவில் குடிநீா், கழிவறை வசதி, உணவு உள்ளிட்டவை ஏற்பாடு செய்ய வேண்டும். வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி, உணவு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT