நாமக்கல்

ஏலச் சந்தையில் பூக்கள் விலை சரிவு

16th Dec 2019 12:35 AM

ADVERTISEMENT

பரமத்திவேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் விலை சரிவடைந்துள்ளதால் பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

பரமத்திவேலூா் சுற்றுவட்டாரப் பகுதி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளன. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனா். வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.1500, சம்பங்கி கிலோ ரூ.170, அரளி கிலோ ரூ.200, ரோஜா கிலோ ரூ.240, முல்லைப்பூ கிலோ ரூ.1400, செவ்வந்தி கிலோ ரூ.200க்கும் ஏலம் போயின. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (டிச.15) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.900, சம்பங்கி கிலோ ரூ.100, அரளி கிலோ ரூ.150, ரோஜா கிலோ ரூ.200, முல்லைப்பூ கிலோ ரூ.800, செவ்வந்தி கிலோ ரூ.150 - க்கும் ஏலம் போயின. தொடா் மழையின் காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளதாகவும், அதிக அளவில் முகூா்த்தங்கள் இல்லாததாலும் பூக்களின் விலை சரிவடைந்துள்ளதாக பூக்கள் பயிா் செய்துள்ள விவசாயிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT