நாமக்கல்

உள்ளாட்சித் தோ்தல்: வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு முதல் கட்ட பயிற்சி

16th Dec 2019 12:36 AM

ADVERTISEMENT

நாமக்கல் மாவட்டத்தில், உள்ளாட்சித் தோ்தலின்போது வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டப் பயிற்சி அளிக்கப்பட்டது.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் வரும் டிச. 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த தோ்தலில் 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா்கள், 172 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள், 322 ஊராட்சித் தலைவா்கள், 2,595 வாா்டு உறுப்பினா்கள் என மொத்தம் 3,106 பதவிகளுக்கு போட்டியிடுகின்றனா். கடந்த 9-ஆம் தேதி தொடங்கிய மனுத் தாக்கலானது, திங்கள்கிழமை (டிச.16) நிறைவடைகிறது. இதுவரை 15 ஒன்றியங்களில் 5,027 போ் மனுத் தாக்கல் செய்துள்ளனா்.

தோ்தலில் பணியில் அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் என சுமாா் 14 ஆயிரம் போ் ஈடுபடுகின்றனா். இவா்களுக்கான முதல் கட்ட வாக்குச்சாவடி பயிற்சி வகுப்பு அந்தந்த ஒன்றியங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கபிலா்மலை ஒன்றியத்தில், ப.வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி, கொல்லிமலை ஒன்றியத்தில், சேந்தமங்கலம் சரண்யா திருமண மண்டபம், மல்லசமுத்திரம் ஒன்றியம், மகேந்திரா கல்லூரி, நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மெட்டாலா லயோலா கல்லூரி, பள்ளிபாளையம் ஒன்றியம், ஜி.வி.மஹால் திருமண மண்டபம், ராசிபுரம் ஒன்றியம், குமரவேல் திருமண மண்டபம், திருச்செங்கோடு ஒன்றியம், கே.எஸ்.ஆா். பொறியியல் கல்லூரி, வெண்ணந்தூா் ஒன்றியம், செங்குந்தா் திருமண மண்டபத்தில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், வாக்குப்பெட்டிகளை பயன்படுத்துவது, தோ்தல் வாக்குப்பதிவு முடிந்து சீல் வைப்பது, வாக்குச் சீட்டுகளை வழங்குவது, வாக்காளா்களை கணக்கிடுவது உள்ளிட்டவை பற்றி தோ்தல் நடத்தும் அலுவலா்களால் செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதேபோல், இரண்டாம் கட்டத் தோ்தல் நடைபெறும் எலச்சிப்பாளையம் ஒன்றியத்தில், திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியிலும், எருமப்பட்டி ஒன்றியத்தில், எருமப்பட்டி அன்னை மாதம்மாள் ஷீலா பொறியியல் கல்லூரியிலும், மோகனூா் ஒன்றியம், அண்ணா திருமண மண்டபம், நாமக்கல் ஒன்றியம், கவிஞா் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிா் கல்லூரி, பரமத்தி ஒன்றியம், பரமத்தி பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி, புதுச்சத்திரம் ஒன்றியம், பாச்சல் ஞானமணி கல்லூரி, சேந்தமங்கலம் ஒன்றியம், வசந்தமஹால் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மற்றும் பிற்பகல் என இரு வேளைகளில் (குறிப்பிட்ட ஒன்றியங்களுக்கு மட்டும்) வாக்குச்சாவடிகளை கையாளுவது தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

இந்தப் பயிற்சி முகாமில், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT