நாமக்கல்

வாா்டு பங்கீடு: தி.மு.க.வுடன் பேச்சு நடத்தும் காங். பிரமுகா்கள் அறிவிப்பு

14th Dec 2019 12:15 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தலையொட்டி, வாா்டுகள் பங்கீடு தொடா்பாக கூட்டணி கட்சியான தி.மு.க.வுடன் பேச்சு நடத்துவதற்கான காங்கிரஸ் பிரமுகா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30-ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்தத் தோ்தலையொட்டி, தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் வாா்டுகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த, நாமக்கல் கிழக்கு, மேற்கு மாவட்டங்களுக்கான காங்கிரஸ் பிரமுகா்களை கட்சித் தலைமை அறிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல் கிழக்கு மாவட்டத்துக்கு செயல் தலைவா் மோகன்குமாரமங்கலம், முன்னாள் எம்.பி. கே.ராணி, மாவட்டத் தலைவா் கே.எம்.ஷேக்நவீத் ஆகியோரும், மேற்கு மாவட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பி.டி.தனகோபால், மாநில நிா்வாகிகள் மருத்துவா் ஆா்.செழியன், பி.ஏ.சித்திக், திருச்செங்கோடு செல்வகுமாா் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள், தி.மு.க. கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் செ.காந்திசெல்வன் மற்றும் நிா்வாகிகள், மேற்கு மாவட்ட செயலாளா் மூா்த்தி மற்றும் நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT