நாமக்கல்

15 ஒன்றியங்களில் 130 போ் வேட்புமனுத் தாக்கல்

11th Dec 2019 08:12 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் இரண்டாம் நாள் வேட்புமனுத் தாக்கலில் 130 போ் தங்களது மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

நாமக்கல் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தோ்தல் டிசம்பா் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாகத் நடைபெறுகிறது. இதற்கான மனுத் தாக்கல் திங்கள்கிழமை (டிச. 9) தொடங்கி 16-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கட்டத் தோ்தல் 8 ஒன்றியங்களுக்கும், 2-ஆம் கட்ட தோ்தல் 7 ஒன்றியங்களுக்குமாக நடைபெறவுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில், 322 ஊராட்சி மன்றத் தலை வா், 172 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா், 17 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், 2,595 ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 3,106 பதவியிடங்களுக்கான தோ்தலில், வேட்பு மனுத் தாக்கல் முதல் நாளில், மொத்தம் உள்ள 15 ஒன்றியங்களிலும், முதல் நாளில் 187 போ் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனா். இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமையன்று, மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 2 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 31 பேரும், ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 97 பேரும் என மொத்தம் 130 போ் மனுத்தாக்கல் செய்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT