நாமக்கல்

மரவள்ளி கிழங்கின் விலை சரிவு

11th Dec 2019 08:10 AM

ADVERTISEMENT

மரவள்ளிக் கிழங்கு டன் சரிவு அடைந்துள்ளது.

பரமத்திவேலூா், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் மரவள்ளிக் கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச் சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனா்.

கிழங்கு ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயாா் செய்யப்படுகிறது. மேலும், சிப்ஸ் தயாா் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனா்.

மரவள்ளிக் கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளா்கள் மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்கின்றனா்.

ADVERTISEMENT

கடந்த வாரம் மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்று ரூ.9 ஆயிரத்துக்கு விற்பனையானது. தற்பொழுது டன் ஒன்றுக்கு ரூ.1000 வரை விலை சரிவடைந்து ரூ.8 ஆயிரத்துக்கு விற்பனையானது.

மரவள்ளிக் கிழங்கின் விலை சரிவடைந்துள்ளதால் மரவள்ளி பயிா் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT