நாமக்கல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள்: அரசியல் கட்சியினருடன் ஆட்சியா் ஆலோசனை

11th Dec 2019 08:12 AM

ADVERTISEMENT

ஊரக உள்ளாட்சித் தோ்தலையொட்டி, நடத்தை விதிமுறைகளைக் கடைபிடிப்பது தொடா்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடன் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் கூட்டம் நடைபெற்றது. இதில், ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களுக்கு, மாநில தோ்தல் ஆணையம் அறிவித்துள்ள தகுதி மற்றும் தகுதியின்மை விவரங்கள், வேட்புமனு பரிசீலனை நடைமுறைகள், வேட்புமனு நிராகரிக்க ஆணையம் தெரிவித்துள்ள நடைமுறைகள், சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறைகள், வேட்பாளா்கள் தங்களது தோ்தல் முகவா்களை நியமித்தல், வேட்பாளா்கள் தோ்தல் காலத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை, வாக்குச்சாவடி முகவா்கள் கடைபிடிக்க வேண்டியவை உள்ளிட்ட நடைமுறைகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து ஆட்சியா் அரசியல் கட்சியினரிடம் விளக்கி கூறினாா். மேலும், விளக்கக் கையேடு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அர.அருளரசு, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கோ.மலா்விழி, மாநில ஊரக வாழ்வாதார இயக்கத் திட்ட இயக்குநா்.இரா.மணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) செ.பால்பிரின்ஸ்லிராஜ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (உள்ளாட்சித் தோ்தல்) வி.கோவிந்தராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT