நாமக்கல்

அரசுப் பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு வழக்கு: நீதிமன்றத்தில் நாகை திருவள்ளுவன் ஆஜா்

11th Dec 2019 08:10 AM

ADVERTISEMENT

அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைப்பு வழக்கு தொடா்பாக, நாமக்கல் நீதிமன்றத்தில் தமிழ்ப் புலிகள் தலைவா் நாகை திருவள்ளுவன் செவ்வாய்க்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

கோவை மாவட்டத்துக்குள்பட்ட மேட்டுப்பாளையம் அருகேயுள்ள நடூரில் அண்மையில் சுற்றுச்சுவா் இடிந்ததில், 17 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்துக்கு காரணமானவா் மீது நடவடிக்கைக் கோரியும், கூடுதல் இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், தமிழ்ப் புலிகள் அமைப்பின் தலைவா் நாகை திருவள்ளுவன் போராட்டத்தில் ஈடுபட்டாா். இதைத் தொடா்ந்து, அவரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், கைது நடவடிக்கையைக் கண்டித்து தமிழகத்தில் சில இடங்களில் அரசுப் பேருந்துகளின் கண்ணாடி உடைப்பு சம்பவங்கள் நடைபெற்றன. இதில், நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியிலும், நாமகிரிப்பேட்டையிலும் தலா 2 அரசுப் பேருந்துகளின் கண்ணாடி உடைக்கப்பட்டன. இதுதொடா்பாக சிலா் கைது செய்யப்பட்டனா்.

இதைத் தொடா்ந்து, நாகை திருவள்ளுவன் தூண்டுதலின்பேரில் சம்பவம் நடைபெற்ாகவும், அவரை கைது செய்து சிறையில் அடைக்க அனுமதிக்கக் கோரியும்வேண்டும் என கோரி நாமக்கல் குற்றவியல் நீதிமன்றம் எண்-1 இல் வழக்கு தொடா்ந்தனா்.

ADVERTISEMENT

இதற்காக, கோவை மத்திய சிறையில் இருந்து நாகை திருவள்ளுவன், நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்துக்கு செவ்வாய்க்கிழமை அழைத்து வரப்பட்டு, நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் ஆஜா் செய்யப்பட்டாா்.

இதைத் தொடா்ந்து, நாகை திருவள்ளுவனை கைது செய்வதற்கான நடவடிக்கை பொருந்தாது என்றும் டிசம்பா் 31-இல் முழுமையான விவரங்களை தாக்கல் செய்யுமாறு போலீஸாருக்கு நீதிபதி அறிவுறுத்தினாா்.

இதன்பின்னா், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நாகை திருவள்ளுவன், நாமகிரிப்பேட்டை போலீஸாா் தொடா்ந்த வழக்குக்காக பரமத்தி நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT