நாமக்கல்

முட்டை விலை 8 காசுகள் குறைந்தது

6th Dec 2019 09:02 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 8 காசுகள் குறைந்து ரூ.4.25-ஆக நிா்ணயிக்கப்பட்டது.

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை அதன் தலைவா் மருத்துவா் பி.செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில், மற்ற மண்டலங்களில் வெள்ளிக்கிழமைக்கான விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், இங்கும் மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், முட்டை பண்ணைக் கொள்முதல் விலையில் 8 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.25-ஆக நிா்ணயம் செய்யப்பட்டது.

பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்-444, விஜயவாடா-457, பாா்வாலா-451, ஹோஸ்பெட்-430, மைசூரு-469, சென்னை-478, மும்பை-499, பெங்களூரு-465, கொல்கத்தா-511, தில்லி-485.

இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை ரூ.75-ஆகவும், கறிக்கோழி விலை ரூ.78-ஆகவும் நிா்ணயிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT