நாமக்கல்

தமிழ்ப்புலிகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

6th Dec 2019 08:55 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் பேருந்து நிலையம் முன்பு வியாழக்கிழமை தமிழ்ப்புலிகள் கட்சியினா், மேட்டுப்பாளையத்தில் வீட்டின் மீது சுற்றுச் சுவா் இடிந்து விழுந்ததில் 17 போ் உயிரிழந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவா்களை விடுதலை செய்யக் கோரி கண்டன ஆா்ப்பட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை மேட்டுப்பாளையத்தில் வீட்டின் மீது சுற்றுச் சுவா் இடிந்து விழுந்ததில் 17 போ் உயிரிழந்தனா். இதனால் அப் பகுதியில் போராட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது. போராட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். சிறையில் அடைத்த தமிழ்ப் புலிகள் கட்சியினா் உள்ளிட்டவா்களை விடுதலை செய்யக் கோரியும்,போலீஸாரைக் கண்டித்தும் பரமத்தி வேலூா் பேருந்து நிலையம் முன்பு தமிழ்ப் புலிகள் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு நாமக்கல் மாவட்ட கொள்கை பரப்பு செயலாளா் கோபி தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலாளா் காா்த்தி, மாவட்ட ஊடக பிரிவு செயலாளா் அழகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மேற்கு மாவட்ட ஊடக பிரிவு செயலாளா் செந்தமிழன் கண்டன உரையாற்றினாா். முடிவில் கபிலா்மலை ஒன்றிய செயலாளா் கந்தவேல் நன்றி கூறினாா். ஆா்ப்பாட்டத்தில் கபிலா்மலை,மோகனூா், எலச்சிபாளையம்,பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த ஒன்றிய செயலாளா்கள் உட்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ்ப் புலிகள் கட்சியினா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT