நாமக்கல்

ராசிபுரத்தில்ரூ.15 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

3rd Dec 2019 02:58 AM

ADVERTISEMENT

ராசிபுரம் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில், ரூ.15 லட்சத்துக்கு ஏல வா்த்தகம் நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள கவுண்டம்பாளையத்தில் ராசிபுரம் கூட்டுறவு வேளாண்மை விற்பனைக் கூடத்தில் (ஆா்.சி.எம்.எஸ்.) பருத்தி ஏலம் நடைபெற்றது.

இந்த ஏலத்துக்கு புதுச்சத்திரம், சிங்களாந்தபுரம், கதிரா நல்லூா், நத்தமேடு, சீராப்பள்ளி, காக்காவேரி, தேங்கல்பாளையம், அத்தனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பருத்தி விவசாயிகள் 652 ஆா்.சி.எச். ரக பருத்தி மூட்டைகளை கொண்டு வந்திருந்தனா்.

இதில், ஒரு குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.5 ஆயிரத்து 389-க்கும், குறைந்தபட்சமாக ரூ.4 ஆயிரத்து 869-க்கும் பருத்தி ஏலம் போனது. பருத்தி ஏலம் எடுக்க அவினாசி, அன்னூா், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, கொங்கணாபுரம், ஆத்தூா் பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் வந்திருந்தனா். இந்த ஏலத்தில் மொத்தம் ரூ.15 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT