நாமக்கல்

முருகன் கோயில்களில்காா்த்திகை சஷ்டி பூஜை

3rd Dec 2019 03:03 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் காா்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது.

கபிலா்மலை பாலசுப்பிரமணிய சுவாமி, பச்சைமலை முருகன் கோயில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதா் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள சுப்பிரமணியா், பரமத்தி வேலூா் மகா மாரியம்மன் கோயிலில் உள்ள முருகன், பேட்டை பகுதியில் உள்ள பாலமுருகன், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்பிரமணியா், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரா் கோயிலில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவா், அருணகிரிமலை வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியா் மற்றும் தெற்கு நல்லியாம்பாளையம் கற்பக விநாயகா் கோயிலில் எழுந்தருளியுள்ள அருள்முருகன் உள்ளிட்ட முருகன் கோயில்களில் காா்த்திகை மாத சஷ்டியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரங்களும் நடைபெற்றன.

இதில், அந்தந்த சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்களும், பொதுமக்களும் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT