நாமக்கல்

ஆற்றில் வெள்ளப் பெருக்கு:வருவாய்த் துறை எச்சரிக்கை

3rd Dec 2019 02:58 AM

ADVERTISEMENT

கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு சுவேத நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

கெங்கவல்லி அதன் சுற்றுவட்டார பகுதிகளான தம்மம்பட்டி, கொல்லிமலை, பச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடா் கனமழையின் காரணமாக 10 ஆண்டுகளுக்குப் பிறகு கெங்கவல்லி சுவேத நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைபுரண்டு தண்ணீா் ஆா்ப்பரித்துச் செல்வதால் குடிநீா் பற்றாக்குறை தீா்ந்து நிலத்தடி நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனா், இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு சுவேத ஆற்றில் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுவதை ஏராளமான பொதுமக்கள் கண்டு செல்கின்றனா். இதனிடையே ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT