நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 3 காசுகள் உயர்ந்து ரூ. 3.59-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை இரவு 7 மணியளவில், அதன் தலைவர் மருத்துவர் பி. செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஐதராபாத், விஜயவாடா உள்ளிட்ட மண்டலங்களில் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைச் சுட்டிக்காட்டி, விலையை உயர்த்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, வெள்ளிக்கிழமைக்கான முட்டை பண்ணைக் கொள்முதல் விலை 3 காசுகள் உயர்த்தப்பட்டு, ரூ. 3.59-ஆக அறிவிக்கப்பட்டது. சென்னை மண்டலத்தில் 15 காசுகள் உயர்ந்து ஒரு முட்டை ரூ. 3.60-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், கறிக்காழி கிலோ ரூ. 63-ஆக நிர்ணயிக்கப்பட்டது.