நாமக்கல் அரசு மருத்துவமனையில், ரூ. 1 லட்சம் மதிப்பிலான கண்காணிப்பு கேமராக்கள் வியாழக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களைத் தடுக்கும் பொருட்டு, காவல் துறை சார்பிலும், தனியார் அமைப்புகள் சார்பிலும் ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. அண்மையில், நாமக்கல் கடைவீதியில், நகை வியாபாரிகள் சங்கம் சார்பில் 16 கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில், அரசு தலைமை மருத்துவமனையில், தன்னார்வ அமைப்பு சார்பில், மருத்துவமனை வளாகத்திலும், வெளியே சாலைப் பகுதியிலும் ஐந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதனை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு வியாழக்கிழமை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ராஜ்மோகன், தன்னார்வ அமைப்பினர் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.