நாமக்கல்

கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

29th Aug 2019 09:08 AM

ADVERTISEMENT

கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் (தன்னாட்சி) கட்டட பொறியியல் துறை சார்பில் ஏ.ஐ.சி.டி.இ மற்றும் எஸ்.இ.ஆர்.பி நிதியுதவியுடன் சுற்றுச்சூழல் தர மதிப்பீடு மற்றும் இணையத்தைப் பயன்படுத்தி சுகாதார அமைப்புகளை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
 துவக்க விழாவில், கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் . கே.எஸ். ரங்கசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர், ஆர். சீனிவாசன் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கு. தியாகராஜா முன்னிலை வகித்தனார். முதல்வர் ஆ.குமாரவேல் வரவேற்றார் .
 மாஷா பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கட்டடப் பொறியியல் துறையில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
 கொரியாவின் கியோங்சாங் தேசிய பல்கலைக்கழகத்தின் வாழ்க்கை அறிவியல் பிரிவின் பேராசிரியர் கிம் ஜெ இன் "உணவுப் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக்கான துல்லியமான இனப்பெருக்கம் மூலம் பசுமை புரட்சி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
 பெங்களூரு, இந்திய அறிவியல் கழகத்தின் சிவில் இன்ஜினீயரிங் துறை பேராசிரியர் டி.ஆர்.எம்.எஸ்.மோகன் குமார், நீர் தர கண்காணிப்பு, மாடலிங் சிக்கல்கள் மற்றும் சவால்கள்குறித்து தனது அனுபவத்தைக் கூறினார்.
 ஆர்.பி.பி. குழுமத்தின் தலைவரான.பி.செல்வசுந்தரத்துக்கு சிறந்த பில்டர் விருதையும், மூன்று புகழ்பெற்ற கட்டட பொறியியல் துறையின் முன்னாள் மாணவர் விருதையும் கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்களின் துணை தலைவர், ஆர். சீனிவாசன் வழங்கினார். கட்டட பொறியியல் துறையின் தலைவர் ஜி.வெண்ணிலா நன்றி கூறினார்.
 பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளை முன்வைத்தனர். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT