நாமக்கல்

செப். 1-இல் பட்டணம் ஓம்சிவசக்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்

28th Aug 2019 10:11 AM

ADVERTISEMENT

ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் அருள்மிகு ஓம்சிவசக்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் செப். 1-ஆம் தேதி நடைபெறுகிறது.
இக்கோயிலின் கும்பாபிஷேக விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது. 
இதனைத் தொடர்ந்து,  வரும் செப். 1-இல் காலை  அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. செப். 2-இல்  விநாயகர் சதுர்த்தி விழாவும் நடைபெறும்.
இதில், பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு  விநாயகர் அருள்பெறுமாறும், பக்தர்கள் யாகத்துக்கு தேவையான மஞ்சள், குங்குமம், பால், வெண்ணெய், பூ வகைகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கலாம் எனவும் விழாக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT