நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம், அத்தனூர் பேரூராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.
இக் கண்காட்சியில், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கிய நலத்திட்ட உதவி புகைப்படங்கள், புதிய திட்டப் பணிகளை தொடக்கி வைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் மருத்துவர் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இதனை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.