நாமக்கல்

முட்டை விலை 3 காசுகள் உயர்வு

27th Aug 2019 10:49 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 3 காசுகள் உயர்ந்து, ரூ.3.48-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனைக் கூட்டம்  அதன் தலைவர் மருத்துவர் பி.செல்வராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. 
இந்தக் கூட்டத்தில், பிற மண்டலங்களின் விலை நிலவரத்தைச் சுட்டிக்காட்டியும், மழையின் தாக்கம் சற்று குறைந்துள்ளதாலும், விலையில் மாற்றம் கொண்டு வரலாம் என பண்ணையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, செவ்வாய்கிழமைக்கான (புதிய விதிகளின்படி ஒரு நாள் முன்பாக) முட்டை பண்ணைக்கொள்முதல் விலை 3 காசுகள் உயர்த்தப்பட்டு ரூ.3.48-ஆக அறிவிக்கப்பட்டது.
பிற மண்டலங்களில் முட்டை விலை விவரம் (காசுகளில்): ஹைதராபாத்-316, விஜயவாடா-334, பார்வாலா-334, மைசூரு-336, ஹோஸ்பெட்-295,  சென்னை-345, மும்பை-365, பெங்களூரு-330, கொல்கத்தா-381, தில்லி-346.
இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், கறிக்கோழி கிலோ ரூ.62-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT