நாமக்கல்

வேளாண் சங்கத்தில் ரூ.12 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

23rd Aug 2019 08:58 AM

ADVERTISEMENT

நாமக்கல் வேளாண் உற்பத்தியாளர்கள் விற்பனை சங்கத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ.12 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
 நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெறுகிறது. நாமக்கல், துறையூர், ஆத்தூர், ராசிபுரம், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்த பருத்தியை ஏலத்துக்கு கொண்டு வருவர். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் 750 மூட்டை ஆர்.சி.ஹெச், சுரபி ரக பருத்தி மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்ன. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பருத்தியை ஏலம் எடுக்க வந்திருந்தனர். இதில், ஆர்.சி.ஹெச் ரகம் ரூ.5,550 முதல் ரூ.5,900 வரையிலும், சுரபி ரகம் ரூ.5,700 முதல் 6,206 வரையிலும் விலை போனது. மொத்தம் ரூ.12 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT