நாமக்கல்

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 6 பவுன் நகை பறிப்பு

23rd Aug 2019 08:57 AM

ADVERTISEMENT

பரமத்தி வேலூர் வட்டம், பாண்டமங்கலம் அருகே புதன்கிழமை இரவு வீட்டில் தனியாக இருந்த பெண்ணை மிரட்டி 6 பவுன் தங்க நகையைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 பாண்டமங்கலம் அருகே உள்ள உரம்பூரைச் சேர்ந்தவர் சண்முகம். லாரி ஓட்டுநர். இவரது மனைவி நதியா (32). இவர்களுக்கு சபரியா, செளபர்ணிகா என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளனர். சண்முகம் லாரி ஓட்டுவதற்கு சென்று விட்டதால் நதியா தனது இரு குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தநிலையில் புதன்கிழமை இரவு நதியா வீட்டின் முன்பக்க இரும்பு கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு உள்கதவை பூட்டாமல் குழந்தைகளுடன் தூங்கியுள்ளார்.
 அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மூவர், முன்பக்க இரும்பு கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று துôங்கிக்கொண்டிருந்த நதியாவை மிரட்டி அவர் கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளை பறித்துச் சென்றனர். இதையடுத்து நதியா வெளியே வந்து சத்தமிட்டு அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார். பின்னர் பரமத்தி வேலூர் போலீஸில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த போலீஸார், தனியாக இருந்த பெண்ணை மிரட்டி தங்க நகைகளைப் பறித்துச் சென்ற மர்ம நபர்கள் மூவர் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT