நாமக்கல்

முட்டை விலை 10 காசுகள் சரிவு

23rd Aug 2019 08:47 AM

ADVERTISEMENT

நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் சரிந்து, ரூ.3.58-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 நாமக்கல் மண்டலத்தில், தினசரி முட்டை விலை நிர்ணயத்தை, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு அமல்படுத்திய நிலையில், செவ்வாய்க்கிழமை 3 காசு உயர்த்தப்பட்டது. புதன்கிழமை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த நிலையில், பிற மண்டலங்களில் முட்டை விலை சரிவடைந்ததையடுத்து, வியாழக்கிழமை நாமக்கல் மண்டலத்திலும் 10 காசுகள் குறைக்கப்பட்டன. இதனால், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.3.58-ஆக சரிந்துள்ளது.
 பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (காசுகளில்): ஹைதராபாத் - 310, விஜயவாடா - 335, பார்வாலா - 312, மைசூரு -345, ஹோஸ்பெட் - 300, சென்னை - 365, மும்பை - 375, பெங்களுரு - 335, கொல்கத்தா - 377, தில்லி - 337.
 இதேபோல், பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.72-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT