நாமக்கல்

பாவை நிருத்யாலயா பள்ளியில் ஆண்டு நாட்டிய விழா

23rd Aug 2019 08:59 AM

ADVERTISEMENT

பாவை கல்விக் குழுமத்தின் பாவை நிருத்யாலயா நடனப் பள்ளியில் ஆண்டு நாட்டிய விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பாவை கல்வி நிறுவனங்களின் இயக்குநர் (மாணவர் நலன்) அவந்தி நடராஜன் வரவேற்றார்.
 நாட்டிய பள்ளியின் இயக்குநர் அனுபமா நரேஷ் ஆண்டறிக்கை வாசித்தார். கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆடிட்டர் என்.வி.நடராஜன் தலைமை வகித்தார். இதில் அவர் பேசியது:
 மாணவர்களுக்கு கல்வியோடு தனிப்பட்ட ஆற்றல் மற்றும் விருப்பத்தை அறிந்து அந்தத் துறைகளில் அவர்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இக்கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதற்காக தரமான பயிற்சியை வழங்கி வருகிறது.நமது கலாசாரத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
 தொடர்ந்து பரதம், நட்டுவாங்கம் போன்றவற்றில் பங்கேற்றவர்கள் பரிசளித்து பாராட்டப்பட்டனர். இவ்விழாவில் பாவை கல்வி நிறுவனங்களின் தாளாளர் மங்கை நடராஜன், செயலாளர் டி.ஆர்.பழனிவேல், இணைச்செயலர் என்.பழனிவேல், இயக்குநர் (சேர்க்கை) கே.செந்தில், தி ஆர்ட் ப்ரூ நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர் ராஜவேல், பாவை வித்யாஸ்ரம் பள்ளிகளின் இயக்குநர் சி.சதீஸ், துணை முதல்வர் ரோஹித் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT