நாமக்கல்

அகரம் கிராமத்தில் முதல்வரின் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்

23rd Aug 2019 08:59 AM

ADVERTISEMENT

திருச்செங்கோடு வட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியம், அகரம் கிராமத்தில் முதல்வரின் சிறப்பு குறை தீர்வு திட்ட முகாம் சின்ன எலச்சிப்பாளையம் சமுதாய நலக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
 முகாமில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். 
 எலச்சிப்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நிழற் கூடம், கழிப்பிடம் அமைக்க வேண்டும். காவல் நிலையம் பின்புறம் உள்ள நூலகத்திற்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும். 108 ஆம்புலன்ஸ் வசதியை மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த தார்ச்சாலைகளை சீரமைக்க வேண்டும். சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 அகரம் ஊராட்சி சேவை மைய அலுவலகத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். செக்காங்காடு. தொரட்டிக்காடு. கணக்கன்காடு, சின்ன எலச்சிப்பாளையம்,அகரம் மயானம் ஆகிய பகுதிகளில் சாக்கடை கால்வாய்கள் அமைக்க வேண்டும், எலச்சிப்பாளையம் அரசு மருத்துவமனையைத் தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுக்களை அரசியல் கட்சியினர்,பொதுமக்கள் வழங்கினர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT