நாமக்கல்

பரமத்திவேலூர் சக்தி விநாயகர் கோயிலில் திருவிளக்கு பூஜை

16th Aug 2019 09:02 AM

ADVERTISEMENT

பரமத்திவேலூர் சக்தி விநாயகர் கோயிலில் ஆடி மாத பெளர்ணமியை முன்னிட்டு திருவிளக்கு பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
 முன்னதாக சக்தி விநாயகர் கோயிலில் உள்ள துர்கை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அலங்காரம், மாங்கல்ய பூஜை நடத்தப்பட்டது. பின்னர் 108 திரு விளக்குகளை பெண்கள் ஏற்றி வழிபட்டனர். இதேபோல, பரமத்திவேலூர் தெற்கு தெருவில் உள்ள கொங்கலம்மன் கோயிலில் ஆடிமாத பெளர்ணமியை முன்னிட்டு 9-ஆம் ஆண்டு பால்குட விழா நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு பக்தர்கள் கோயிலிலிருந்து காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி பால்குடங்களுடன் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். நண்பகல் கொங்கலம்மனுக்கு பால்குட அபிஷேகம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT