நாமக்கல்

பரமத்திவேலூரில் சுதந்திர தின விழா

16th Aug 2019 09:25 AM

ADVERTISEMENT

பரமத்திவேலூர் வட்டாரத்தில் பள்ளி, கல்லூரிகளில் வியாழக்கிழமை வெகு உற்சாகமாக சுதந்தி தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
 பரமத்தி வேலூர் வட்டம், கந்தம்பாளையம் எஸ்.கே.வி வித்யாஸ்ரம் மற்றும் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி தலைவர் ரவி,பொருளாளர் பாலசுப்ரமணியம், கல்வி இயக்குநர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவில் பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
 பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளியின் தலைவர் பழனியப்பன் தலைமை தாங்கி தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். செயலாளர் கந்தசாமி, பொருளாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலாசாரத்தையும், தேசப்பற்றையும் பறைசாற்றும் விதமாக மாணவ,மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
 பாண்டமங்கலம் விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் விவேகானந்தை கல்வி நிறுவனங்களின் தளாளர் பழனிசாமி வரவேற்றார். ஸ்ரீ விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் சுப்பிரமணியம், பொருளாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஸ்ரீ விவேகானந்தா கல்வி அறக்கட்டளையின் தலைவர் மருத்துவர் நெடுஞ்செழியன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். விழாவில் இயக்குநர்கள்,ஆசிரிய,ஆசிரியைகள்,பெற்றோர்கள் மற்றும் மாணவ,மாணவியகள் கலந்து கொண்டனர். பாண்டமங்கலம் ஆர்.என்.ஆக்ஸ்போர்டு பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளியின் தலைவர் சண்முகம் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ஆர்.என்.ஆக்ஸ்போர்டு ப்ளிக் பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளியின் செயலாளர் ராஜா தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
 இதேபோல் பரமத்தி வேலூர் கல்லூரி சாலையில் உள்ள மழலையர் பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளியின் தாளாளர் சக்திவேல் தேசியக் கொடியை ஏற்றி வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினார். விழாவை முன்னிட்டு பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் பள்ளியின் இயக்குநர்கள் அருள்,சேகர்,ஆசிரிய,ஆசிரியைகள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
 வேலூர் நகர அனைத்து வர்த்தக சங்க வளாகத்தில் நகர அனைத்து வர்த்தகர் சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. வர்த்தகசங்கத் தலைவர் சுந்தரம் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். விழாவில் சங்க நிர்வாகிகள்,செயற்குழு உறுப்பினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT