நாமக்கல்

டிரினிடி மகளிர் கல்லூரியில் சுதந்திர தின விழா

16th Aug 2019 09:03 AM

ADVERTISEMENT

நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
 கல்லூரி தலைவர் பி.எஸ்.கே.செங்கோடன் தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் எம் .ஆர். லட்சுமிநாராயணன் அனைவரையும் வரவேற்றார். டிரினிடி அகாதெமி தலைவர் மருத்துவர் ஆர். குழந்தைவேல், தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திரத்துக்காக பாடுபட்ட இந்திய நாட்டின் தேசத் தலைவர்கள் குறித்து பேசினார். டிரினிடி பன்னாட்டுப் பள்ளியின் தலைவர் பி. பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். நாமக்கல் தங்கம் மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவர் தீப்தி மிஸ்ரா பங்கேற்று, இந்தியாவின் 72 ஆண்டுகால வளர்ச்சியினை எடுத்துரைத்தார். என்.எஸ். எஸ். திட்ட அலுவலர்கள் எம்.சசிகலா மற்றும் எஸ். ஜெயமதி, உடற்கல்வி இயக்குனர் ஏ.நித்யா, நிர்வாக அலுவலர் என்.எஸ்.செந்தில்குமார், வேலைவாய்ப்பு இயக்குனர் கே. மனோகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT