நாமக்கல்

அரசுப் பள்ளியில் விதைப்பந்துகள் தயாரிப்பு

16th Aug 2019 09:03 AM

ADVERTISEMENT

நாமக்கல் அருகே சாலையோரம் தூவுவதற்காக, 5 ஆயிரம் எண்ணிக்கையில் விதைப்பந்து தயாரிக்கும் பணியில் மாணவ, மாணவியர் ஈடுபட்டுள்ளனர்.
 நாமக்கல் முதலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செயல்படும் தேசிய பசுமைப் படை சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் மணிமேகலை தலைமை வகித்தார். பூமி வெப்பமாவதைத் தடுக்கவும், மழைப்பொழிவை அதிகரிக்கவும், காற்று மாசுபடுதலைக் குறைக்கவும் மரங்கள் மிகவும் அவசியம் என மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பசுமைப்படை அமைப்பினர் சாலையோரங்களில் தூவுவதற்காக 5 ஆயிரம் விதைப்பந்துகளைத் தயாரித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில், அதன் ஒருங்கிணைப்பாளர் வனிதாமணி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT