நாமக்கல்

ராசிபுரத்தில் நீர் மேலாண்மை ஆய்வுக் கூட்டம்

11th Aug 2019 03:27 AM

ADVERTISEMENT


ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் செயல்படுத்தப்படும் நீர் மேலாண்மை இயக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் வி.சரோஜா பங்கேற்று, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நகராட்சிப் பகுதியில் உள்ள நீர் சேமிப்பு பகுதிகள், நீர் மேலாண்மை செயல்படுத்துதல் போன்றவை குறித்து அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் நகராட்சி பின்புறம் உள்ள குப்பைக் கூடமாக மாறியுள்ள தெப்பக்குளம் பகுதியைப் பார்வையிட்டு, இதனை நீர் சேமிப்பு பகுதியாக மாற்றும் வழிமுறைகள், சீரமைப்பு குறித்து நேரில் பார்வையிட்டு, நகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் நகராட்சி ஆணையாளர் மா.கணேசன், பொறியாளர் நடேசன், நகர்மன்ற முன்னாள் தலைவர் எம்.பாலசுப்பிரமணியம், மோகனூர் சர்க்கரை ஆலைத் தலைவர் கே.பி.எஸ்.சுரேஷ்குமார், ஆர்.சி.எம்.எஸ். தலைவர் இ.கே.பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT