நாமக்கல்

சட்ட விரோதமாக மது விற்பனை: 3 பேர் கைது

11th Aug 2019 03:27 AM

ADVERTISEMENT


பரமத்தி வேலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 74 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர் பகுதியில் அதிகாலை நேரத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருளரசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், பரமத்தி வேலூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் பழனிசாமி உத்தரவின்படி, பரமத்தி வேலூர் போலீஸார் நான்கு சாலை, பொத்தனூர், வெங்கமேடு உள்ளிட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டனர். 
இதில் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த பொத்தனூரைச் சேர்ந்த மான்ஜெகதீஷ் (37), வேலூர் சுல்தான்பேட்டையைச் சேர்ந்த ராஜேஷ் (44), பொத்தனூர் வெங்கமேட்டைச் சேர்ந்த சத்தியமூர்த்தி (35) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 74 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT