நாமக்கல்

அரசுப் பள்ளியில் நீர் சேகரிப்பு விழிப்புணர்வு

11th Aug 2019 03:29 AM

ADVERTISEMENT


பரமத்தி வேலூர் வட்டம்,பிலிக்கல்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நீர் சேகரிப்பு குறித்து மாணவர்களிடையே காணொலிக் காட்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
 இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஈஷா யோகா அமைப்பின் மூலம் பருவக்காலங்களில் மட்டும் காவிரி ஆற்றில் வெள்ளம் வரும் நிலையில் வருடம் முழுவதும் நீர் ஓடும் வாய்ப்பை ஏற்படுத்த காவிரி கூக்குரல் என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வேளாண் காடு வளர்ப்பதால் விவசாயிகளுக்கு நீடித்த வேளாண்மை நீர் பாதுகாப்பு கிடைக்கும். வேளாண் காடுகளால் மண் வளம் அதிகரிக்கும்,மண் அரிப்பு தடுக்கப்படும். பருவ மழைக் காலங்களில் வரும் மழை நீரை நிலத்தடியில் சேமிப்பதன் மூலம் காவிரியில் வருடம் முழுவதும் நீர் கிடைக்க வழிவகை ஏற்படும் என காணொலிக் காட்சி மூலம் மாணவ,மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் ஆசிரிய,ஆசிரியைகள்,ஈஷா யோகா தன்னார்வலர்கள் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT